Skip to content
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு

1 viewProvincial council Trincomalee

Description

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ. ஹமீர் அவர்கள் இன்று (04) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றனர். அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், இளைஞர் சேவைகள் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட நிர்வாக அதிகாரியாகக் கருதப்படுகிறார். மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது முஸ்லிம் அதிகாரி என்பதுடன், நாடு தழுவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது முஸ்லிம் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related listings

More in Media & Social

See all
Box Guitar

Box Guitar

Media & Social576/ Dolawaththa…
Chandana Ranasinghe4
Rest in Peace

Rest in Peace

Media & SocialBatticaloa
tharmaratnam kanesaratnam2